வியாக்கிரபாத முனிவர் வழிபட்ட தலமாதலால் 'புலியூர்' என்னும் அடைமொழி பெற்று 'ஓமாம்புலியூர்' என்று வழங்கப்படுகிறது. சிவபெருமானிடம் அம்பாள் பிரணவ உபதேசம் பெற்ற தலமாதலால் 'பிரணவ வியாக்கிரபுரம்' என்ற பெயரும் உண்டு.
மூலவர் 'பிரணவ வியாக்ரபுரீஸ்வரர்', 'துயர்தீர்த்தநாதர்' என்னும் திருநாமங்களுடன், சதுர வடிவ ஆவுடையுடன், சற்று பெரிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை 'புஷ்பலதாம்பிகை' என்றும் 'பூங்கொடி நாயகி' என்றும் அழைக்கப்படுகின்றாள். அம்பாள் சுமார் நான்கு அடி உயரம்.
பிரகாரத்தில் விநாயகர், சுப்ரமண்யர், லட்சுமி, சரஸ்வதி, பைரவர் மற்றும் சனீஸ்வரன் ஆகியோர் தரிசனம் தருகின்றனர். இக்கோயிலில் தட்சிணாமூர்த்தி கோஷ்டத்தில் இல்லாமல் தனியாக இருக்கின்றார்.
திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 6.30 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|